Sunday, 3 December 2017

மெர்சல் படத்தின் 50வது நாள் விழாவில் நடந்த சோக சம்பவம்..! ரசிகர்கள் அதிர்ச்சி...!!


மெர்சல் தளபதி விஜய்யின் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் செய்த படம். இப்படம் சுமார் ரூ 250 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் மெர்சல் படத்தின் 50-வது நாள் கொண்டாட்டம் நேற்று சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் கொண்டாடப்பட்டது.

திரையரங்கம் ஹவுஸ்புல் ஆனது மட்டுமின்றி ரசிகர்கள் பேனர், போஸ்ட்டர், பால் அபிஷேகம் என மீண்டும் முதல் காட்சி போலவே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதை தொடர்ந்து திரையரங்கில் ஒரு சில ரசிகர்கள் சீட்டை அடித்து உடைத்துள்ளனர், இவை திரையரங்க உரிமையாளருக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் இதுக்குறித்து வெளியிட்டுள்ளார், இந்நிகழ்வு ஒரு சில ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளனர்.


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: