பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் கோபிநாத். தொகுப்பாளர்களில் அதிக சம்பவம் வாங்குபவரும் இவர்தான் என்று கூறப்படுகிறது. இவரது மனைவி பெயர் துர்கா. இவர்களுக்கு 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது.
கோபிநாத் குறித்து அவரது மனைவி கூறும்போது, எனது கணவருக்கு மட்டன் பிரியாணி, மீன் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும். Ñமீன் வறுவல் என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டு கொண்டே இருப்பார்.
அதுவும் மட்டன் பிரியாணி செய்யும்போது சமையலறைக்கே வந்து விடுவார். இவ்வளவு உப்பு போடு, இந்த அளவுக்கு காரம் போடு என்று என்னை தாளித்து விடுவார்.
அவருக்கு அவரது மகள் வெண்பா என்றால் ரொம்ப இஷ்டம். அதனுடன் விடிய விடிய விளையாடி கொண்டிருப்பார். எங்களை வாரத்தில் இரண்டு முறையாவது வெளியில் அழைத்து சென்று விடுவார். எங்காவது சென்றால் அந்த இடத்தை பற்றி மணிக்கணக்கில் சொல்லி அசத்துவார்.
அதேபோல அவருக்கு புத்தகம் படிப்பது என்றால் பிடித்தமான ஒன்று. எங்கள் வீட்டில் புத்தகத்திற்கு என்றே தனி அறை உண்டு. அதில் சுமார் 3 ஆயிரம் புத்தகத்திற்கு மேல் உள்ளது என்றார்.

0 comments: