Monday, 22 January 2018

முரளி இறந்த பின் அவரது குடும்பம்..! இரண்டாவது மகன், மகள் யார் தெரியுமா?


தமிழில் பூ விலங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் முரளி. பெங்களூரை சேர்ந்த இவரது தந்தை சித்தலிங்கையா. ணூகன்னடத்தில் பிரபல தயாரிப்பாளர். சிறுவயது முதலே நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. னுஎனவே 1984ம் ஆண்டு கன்னடத்தில் பிரமே பர்வம் என்ற படத்தில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகி, 60க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். இதயம், புதுவசந்தம், போன்ற படங்கள் இவருக்கு பெரிய அளவில் புகழை பெற்று தந்த படங்கள்.

இவருடைய மூத்த மகன் அதர்வா. இவர் பானா காத்தாடி படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இமைக்காத நொடிகள் ஒத்தைக்கு ஒத்தை படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் முரளி கடந்த 2010ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக இறந்து போனார். இவருக்கு அதர்வாக தவிர ஆகாஷ் என்ற மற்றொரு மகனும், காவியா என்ற மகளும் உள்ளனர்.
இதில் அதர்வா மட்டுமே சினிமாவில் நடித்து வருகிறார். மற்ற இருவரும் இன்னும் சினிமா துறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: