Sunday, 21 January 2018

ஒரு சிக்ஸ்..! ஒரே சிக்ஸ்..! உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இளம் வீரர்...!!


ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் சுப்மான் கில் கோஹ்லி போலவே ஆடி இருக்கிறார். ஏற்கனவே இவர் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அவர் அடிக்கும் சிக்ஸ் ஒன்றின் வீடியோ வெளியாகி இருக்கிறது. அச்சு அசலாக கோஹ்லி போலவே இவர் அந்த சிக்சை அடித்து இருக்கிறார். இதனால் இவருக்கு டிவிட்டர் முழுக்க பாராட்டு குவிந்து வருகிறது. அந்த வீடியோவும் மிகவும் வைரல் ஆகி உள்ளது.

ஜூனியர் உலக கோப்பை போட்டி தற்போது நியூசிலாந்தில் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. ஜூனியர் அணி அங்கு நடக்கும் ஒவ்வொரு போட்டியிலும் மிகவும் சிறப்பாக விளையாடிக் கொண்டு இருக்கிறது.

இந்த தொடரில் வரிசையாக மூன்று போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது.  முக்கியமாக இந்திய அணியின் சுப்மான் கில் என்ற வீரர் மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.

 பஞ்சாப்பை சேர்ந்த இவர் ஜிம்பாபேவுக்கு எதிரான போட்டியில் வெறும் 59 பந்துகளில் 90 ரன் அடித்தார். 13 பவுண்டரி 1 சிக்ஸர் என சிறப்பாக ஆடினார். பிடித்த வீரர் இவருக்கு பிடித்த வீரர் கோஹ்லிதான் என்று கூறியுள்ளார்.

கோஹ்லி போலவே ஆடுவதற்கு முயற்சி செய்து இருக்கிறார். அதேபோல் நிறைய முறை கோஹ்லியை சந்தித்து விளையாடும் டிப்ஸ்கள் வாங்கி இருக்கிறார். சிக்ஸர் இந்த போட்டியில் இவர் அடித்த சிக்ஸ் ஒன்று வைரல் ஆகியுள்ளது.

கோஹ்லி இங்கிலாந்து அணிக்கு எதிராக 2017ல் அடித்த சிக்ஸ் போலவே அவர் அடித்து இருக்கிறார். இந்த போட்டியில் அவர் அடித்த ஒரே சிக்ஸ் இதுமட்டும்தான். இது வீடியோவாக வெளியாகி உள்ளது.

வைரல் ஆனது தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி உள்ளது. இவர் ''சுப்மான் கில் சீக்கிரமே இந்திய ஏ அணிக்காக சீக்கிரம் விளையாடுவார். இந்த இளம் வீரர் அண்டர் 19 உலகக் கோப்பையை கண்டிப்பாக வாங்கி தருவார். இவரும் கோஹ்லி, கைப் போல சாதிப்பார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: