Wednesday, 6 December 2017

மகளின் காதலை ஏற்று கொண்ட கமல்..! மகளின் காதலனுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பு...!!


நடிகர் கமல்ஹாசனின் மகளாக சினிமாவுக்குள் நுழைந்தாலும் தன் திறமையால் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ருதிஹாசன்.

இவர் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சலை காதலிப்பதாக நீண்ட நாட்களாக கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் பல இடங்களில் சுற்றும் புகைப்படங்கள் வெளியாகியது.

சமீபத்தில் ஸ்ருதியின் அம்மாவான சரிகாவும் இருவரையும் வரவேற்ற புகைப்படங்கள் வெளியாகின.

இந்நிலையில் நேற்று நடந்த கண்ணதாசன் பேரனின் திருமண விழாவில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். உடன் கமல்ஹாசனும் இருந்தார். திருமணம், வரவேற்பு இரண்டிலும் பங்கேற்றனர்.

அதிலும் திருமணத்தில் வெளிநாட்டுக்காரரான மைக்கேல் பட்டுவேஷ்டி அணிந்தும், ஸ்ருதி புடவையிலும் பங்கேற்றனர்.

கமலும் உடன் இருந்ததை பார்க்கையில் இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார் என்றே கிசுகிசுக்கப்படுகிறது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: