கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வசந்தி அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.
அப்போது சூப்பர் மார்க்கெட் உரிமையாளரின் நகை காணாமல் போனது. இதனை வசந்திதான் எடுத்துள்ளார் என கூறி உரிமையாளர் திருட்டு பட்டம் கட்டி உள்ளார்.
இது குறித்து கணவனிடம் கூறி வேதனை பட்டார். எனவே கணவன் இனிமேல் அந்த வேலைக்கு போக வேண்டாம் என ஆறுதல் கூறி இருந்தார். இருந்தாலும் வேதனை தாங்கா வசந்தி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நடந்தது கடந்த நவம்பர் 28ம் தேதி.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணி கண்டன் மனைவி இல்லாத உலகில் தன்னால் வாழ முடியாது என்று புலம்பி வந்துள்ளார்.
இந்த நிலையில் மணிகண்டன் தனது மனைவியை அடக்கம் செய்த சமாதி அருகில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: