அரசியல் கட்சி தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தாங்கள் என்ன செய்கிறோம் என தெரியாமல் செய்து கடைசியில் கைதாவது பதவியை விட்டு விலகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பாக்கூர் கிராமத்தில் நடந்த திருவிழாவின் போது பழங்குடியின தம்பதிகளுக்கு இடையேயான முத்த போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டிக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. சைமன் மரான்டி ஏற்பாடு செய்திருந்தார்.
அப்போது பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடினர். அவர்கள் முன்னிலையில் திருமணமான 20 தம்பதிகள் கலந்துகொண்டு ஒருவருக்கு ஒருவர் விடாமல் முத்தம் கொடுத்தனர்.

0 comments: