Sunday, 3 December 2017

திருந்தாத இலங்கை வீரர்கள்.., கழுவி ஊற்றும் இந்திய ரசிகர்கள்


மைதானத்தில் நாடகமாடிய இலங்கை கிரிக்கெட் வீரர்களை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில், இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 371 ரன்கள் எடுத்திருந்தது. கோஹ்லி (156), ரோஹித் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் தனது 6வது இரட்டைசதத்தை பதிவு செய்தார்.
இதில் டெல்லியில் நிலவிய காற்று மாசுபாட்டை காரணம் காட்டி இலங்கை அணி வீரர்களை விளையாடாமல் போட்டியில் தடை ஏற்படுத்தி கொண்டே இருந்தனர்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 536 ரன்கள் எடுத்த போது, இலங்கை வீரர்களின் வாக்கு வாதத்தால், கடுப்பான கோலி, முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தார். இந்நிலையில் பீல்டிங் செய்த போது அனைவரும் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்த இலங்கை வீரர்கள், பேட்டிங் செய்ய களமிறங்கிய போது மாஸ்க் அணியவில்லை.
இதனால் இலங்கை வீரர்களை டுவிட்டரில் ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றிவருகின்றனர்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: