அருவி படம் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் அதிதி பாலன். இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருது கூட கிடைக்கலாம் என்று கோலிவுட் வட்டாரம் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் அருவி படத்தை பார்த்த பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை போனில் அழைத்து பாராட்டினாராம்.
மேலும் உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என்று சூப்பர் ஸ்டாரிடம் அதிதி கேட்டாராம். அவரும் அனுமதி கொடுத்தாராம்.
தற்போது அதிதியை சூப்பர் ஸ்டார் பாராட்டியதோடு மட்டும் அல்லாமல் தங்க சங்கிலி ஒன்றையும் பரிசாக அளித்துள்ளாராம். இந்த இன்ப அதிர்ச்சியால் அதிதி திக்கு முக்காடி போனாராம்.

0 comments: