Sunday, 21 January 2018

பூமியை தாக்க வரும் பயங்கர ஆபத்து..! பிப்ரவரி 4ம் தேதி ஏற்பட போகும் அபாயகரமான விளைவுகள்...!!


வான் வெளியில் சிறியது முதல் மிகப்பெரியது வரையிலான கோடிக்கணக்கான விண்கற்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. அவை பூமியை கடந்து செல்கின்றன.

இந்த விண்கல் துபாயின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவை விட மிகப்பெரியது. 830 மீட்டர் உயரமான இந்த விண்கல் அடுத்த மாதம் பிப்ரவரி 4ம் தேதி பூமியை கடந்து செல்ல உள்ளது என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த விண்கல்லுக்கு 2002 ஏஜே 129 என பெயரிடப்பட்டுள்ளது. பூமிக்கு மிக அருகில் வந்து கொண்டிருக்கும் இந்த விண்கல் மிகவும் அபாயகரமானது என்று நாசா கூறி உள்ளது.

11 கிலோ மீட்டர் அகலமுள்ள இந்த விண்கல் பூமியின் மீது மோதினால் அதில் இருந்து வெளியாகும் விண் துகள்கள் பூமியை போர்வையால் போர்த்தியது போன்ற இருளை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: