Wednesday, 3 January 2018

காணாமல் போன காமெடி நடிகர்..! இப்போது எங்கு இருக்கிறார் தெரியுமா?


தமிழ் சினிமா மட்டும் இன்றி சீரியல் ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர் சுரேஷ் சக்ரவர்த்தி. இவர் கடந்த 1996ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மினி சீரியலான பாட்டிகள் ஜாக்ரதை தொடரில் பெண் வேடமிட்டு பாட்டியாக நடித்தவர் சுரேஷ் சக்ரவர்த்தி.

அந்த காலக்கட்டத்தில் வெளியான அவ்வை சண்முகி படம் போலத்தான் இதன் கதையும் இருந்தது. இவர் எனக்குள் ஒருத்தி தொடரிலும் பெண்ணாக நடித்து இருக்கிறார். இந்த சீரியல்கள் எல்லாம் அவரை தனியாக அடையாளப்படுத்தி காட்டின.

சீரியலில் காமெடி மூலம் கலகலவென சிரிக்க வைத்தவர் அழகன் என்னும் ஒரே படத்தில் மட்டுமே நடித்து உள்ளார். இதன்பிறகு படங்களிலோ அல்லது சீரியல்களிலோ இவரை பார்க்க முடியவில்லை.

தற்போது இவர் ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி உள்ளார். அங்கு பனானா ட்ரீ என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

 மேலும் அங்கு சூட்டிங்கிற்காக வருபவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கிறாராம். சமீபத்தில் பிரபல நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் நீண்ட இடைவேளைக்கு பிறகு என்ட்ரி கொடுத்து அசத்தி இருந்தார். 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: