சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் ஒருவர் மரணம் அடைந்து உள்ளார்.
தனியார் பள்ளியில் ஆசிரியர தண்டித்ததால் மாணவர் நரேந்தர் மரணம் அடைந்துள்ளதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது
மாணவர் நரேந்தர் பள்ளிக்கு காலதாமதமாக வந்ததால் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தண்டனை வழங்கி உள்ளார். அதன்படி தாமதமாக வந்த மாணவர்கள் பள்ளி வளாகத்தை சுற்றி ஓடி உள்ளனர்.
அப்போது மாணவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் கொதித்தெழுந்த பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாணவன் மரணத்திற்கு காரணமான ஆசியரை கைது செய்ய வேண்டும். அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவு கிறது. எனவே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

0 comments: