ஜெயம் ரவியின் அண்ணனான மோகன் ராஜா தம்பியை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் எடுத்த தனி ஒருவன் படம் கோலிவுட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த வேலைக்காரன் படமும் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதனை அடுத்து யாரை வைத்து இயக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரிடம் ரசிகர்கள் இது குறித்து கேள்வி கேட்டனர்.
சூஒரு ரசிகர் அவரிடம் அஜித்தை வைத்து எப்போது படம் இயக்கப்போகிறீர்கள். அது கமர்ஷியலாக இருக்குமா அல்லது நெகட்டிவாக இருக்குமா என கேட்டிருந்தார்.
அதற்கு நிச்சயம் என் ஸ்டைலில் நெகட்டிவ்வாக இருக்கும் என்று கூறி உள்ளார். இது தல ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

0 comments: