Sunday, 21 January 2018

26ம் தேதி பஸ் கண்ணாடிகளை உடைக்கும் போராட்டம்..! தமிழக கல்லூரி மாணவர்கள் எச்சரிக்கை...!!


தமிழகத்தில் நேற்று முன்தினம் பஸ் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர். மேலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இன்று கல்லூரி மாணவர்கள் நெல்லையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், கல்லூரி மாணவர்கள் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி ஜனவரி 26ம் தேதிக்குள் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் 26ம் தேதி தமிழகம் முழுக்க அனைத்து பஸ் கண்ணாடிகளை உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளனர்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: