நடிகை அமலா பால் ரூ 1 கோடி மதிப்புள்ள சொகுசு காரை வாங்கி அதனை போலி ஆவணங்கள் மூலம் புதுச்சேரியில் பதிவு செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்திய எர்ணாகுளம் போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டது. அதன்படி அவரது வழக்கறிஞர் ஆஜராகி ஆவணங்களை ஒப்படைத்தார். அதில் புதுச்சேரியில் குடியிருப்பதாக வழங்கிய ஆவணம் மட்டும் போலியானது என்று தெரியவந்தது.
இது குறித்து அமலா பாலே நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். எனவே அமலா பால் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அதில் நான் படப்பிடிப்பு சம்பந்தமாக பல இடங்களுக்கு செல்வேன்.
அப்படி செல்லும்போது நான் ஓட்டலில் தங்க மாட்டேன். தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்குவேன். அப்படித்தான் புதுச்சேரியில் வாடகைக்கு வீடு வாடகைக்கு எடுத்தேன். எனவே அந்த முகவரியில் வரி கட்டினேன் என்று கூறி இருந்தார்.
இது மனு மீதான விசாரணை கடந்த 9ம் தேதி நடந்தது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்கும் மாநில குற்றப்பிரிவு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் கூறி இருந்தனர்.
அதன்படி நடிகை அமலா பால் 15ம் தேதி ஆஜராகி ஆவணங்களை ஒப்படைத்து விளக்கம் அளித்தார். அமலாபாலின் பதிலில் அதிகாரிகள் திருப்தி அடையவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே அமலா பால் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளகதாவும் கூறப்படுகிறது. இதனால் நடிகை பீதியில் உள்ளார்.

0 comments: