Sunday, 14 January 2018

மனைவிக்கு பயந்து..! பெண் வேடம் போட மறுத்த மதுரை ராமர்...!!


சின்னத்திரையில் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்கள் இரண்டு பேர். ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணன். மற்றொருவர் மதுரை ராமர். இதில் மதுரை ராமர் பெண் வேடம் போட்டு சொன்ன பின்னர்தான் இந்த வார்த்தையே பிரபலமானது.

Ñமதுரை ராமர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அமுதவானனுடன் சேர்ந்து டைட்டிலை வென்றவர். அதன்பிறகு சில வருடம் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. பின்னர் சிரிச்சா போச்சு மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

அதில் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மதுரை ராமரை பெண் வேடம் போட சொன்னார். ஆனால் மதுரை ராமர் போட மறுத்து விட்டாராம். ஏனென்றால் அவரது மனைவிக்கு பெண் வேடம் போடுவது பிடிக்காதாம். அதனால் பிடிவாதமாக மறுத்து வந்தார்.

ஆனால் சிரிச்சா போச்சு இயக்குனர் கண்டிப்புடன் அவர்தான் அந்த பெண் வேடத்தை போட வேண்டும் என்று இருந்தார். அதன்படி வேறு வழியில்லாமல் பெண் வேடம் போட்டு நடித்தார். அந்த வேடம் செம ஹிட் அடித்தது. அவருக்கு பெரிய புகழையும் பெற்று கொடுத்தது.

அதன்பிறகு மதுரை ராமர் இயக்குனரிடம் சென்று மன்னிப்பு கேட்டாராம். நான் மட்டும் இந்த வாய்ப்பை மறுத்து இருந்தால் இந்த அளவுக்கு பிரபலம் ஆகி இருக்க முடியாது என்று நன்றி கூறினாராம். 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: