Tuesday, 9 January 2018

விரைவில் திமுக - அதிமுக கூட்டணி..! தமிழகத்தில் இதுவரை இல்லாத அரசியல் புரட்சி...!!



தமிழக அரசியலை பொறுத்தவரை அசைக்க முடியாத சக்திகளாக அதிமுக மற்றும் திமுக விளங்கி வருகிறது. இந்த கட்சிகளை எதிர்த்து இதுவரை மற்ற எந்த கட்சிகளாலும் காலூன்ற முடியாது என்ற நிலை உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருவராலும் கட்சியை கட்டுக்கோப்பாக நடத்த முடியவில்லை. அதே போல கருணாநிதியின் உடல் நல பாதிப்பு காரணமாக திமுகவும் சுணங்கி போய் உள்ளது.
இது ஆர்.கே நகர் தேர்தலில் அப்பட்டமாக தெரிந்தது. மேலும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வேறு கட்சியை மக்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரஜினியும் அரசியலுக்கு வருவதாக அறிவித்து விட்டார். இவரது வருகை அரசியல் கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. ரஜினிக்கு எதிர்ப்பு இருந்தாலும் பெண்களிடையே அமோக வரவேற்பு உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்போது இருக்கும் பின்னர் பெரும் ஆதரவு அலையாக கூட மாற வாய்ப்பு உள்ளது. முக்கியமாக திராவிட கட்சிகளான அதிமுக - திமுக இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஜினிகாந்த்தை எதிர்கொள்ள என்ன செய்யலாம் என ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக எதிர்ரெதிர் துருவங்களான அதிமுகவும், திமுகவும் இணைந்தால் கூட பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கான திரைமறைவு வேலைகள் ஆரம்பித்து விட்டது. இந்த கூட்டணியின் பாலமாக தினகரன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: