Thursday, 18 January 2018

இனி வருமான வரியே கிடையாது..! மோடி அரசின் புதிய அதிரடி ஐடியா...!!


மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது நாள் முதலே பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் சில முக்கியமான திட்டங்கள் பேச்சுவார்த்தை உடனேயே முடங்கிப்போனது. ஆனால் ஒரு திட்டம் மட்டும் இன்னமும் சூடு குறையாமல் இருக்கிறது.

ஆம், மோடியின் ஆட்சிக்கு வந்த உடனேயே பிஜேபி கட்சியைச் சேர்ந்த பல முன்னணி தலைவர்கள் தனிநபர்கள், மாத சம்பளக்காரர்கள் செலுத்தும் வருமான வரி முறையை முழுமையாக ரத்துச் செய்ய வேண்டும் என்ற மிகப்பெரிய திட்டத்தை முன்வைத்தனர்.

2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது இத்திட்டம் மீண்டும் அரசு அதிகாரிகள், மக்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

எனவே இந்த பட்ஜெட்டில் இந்த அதிரடி திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தனிநபருக்கான வருமான வரியை முழுமையாக நீக்கம் பற்றிய அறிவிப்பு மோடி அரசால் அறிவிக்கப்பட்டால், கண்டிப்பாக 2019ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் பிஜேபி கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: