இன்று இந்திய அணி வலிமையான அணியாக மாறியதற்கு அடித்தளம் போட்டவரே சவுரவ் கங்குலிதான். இவர் இன்று வரை ஓய்வின்றி கிரிக்கெட் போட்டிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாத அளவிற்கு வர்ணனை, பயிற்சி போன்ற பணிகளில் பிசியாக உள்ளார்.
இந்த நிலையில், அவரது வீட்டில் நேற்று சரஸ்வதி பூஜை நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அப்போது குடும்பத்துடன் செல்பி எடுக்க நினைத்தார். ஆனால் குடும்பத்துடன் எப்படி செல்பி எடுப்பது என தெரியாமல் திணறி உள்ளார்.
அதே தனது மகள் சனாவுடன் செல்பி எடுக்க முயன்றும் முடியாமல் தடுமாறி உள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

0 comments: