Monday, 27 November 2017

86 வயதில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற பாட்டி.! பிறகு நடந்த விபரீத சம்பவம்.!!


அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் வங்கி ஒன்றில் வாக்கிங் குச்சியுடன் உள்ளே நுழைந்த 86 வயது மூதாட்டி ஒருவர் துப்பாக்கியை நீட்டி அனைவரையும் மிரட்டியுள்ளார்.
பிறகு துப்பாக்கியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்த போலீசார் யாருக்கு எதுவும் ஆகாமல் அந்த பாட்டியை கைது செய்தனர்.

அப்போது அந்த பாட்டி சம்பவ இடத்திலே மயங்கி விழுந்தார். உடனடியாக அந்த பாட்டியை மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி அளித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து அந்த பாட்டி வைத்திருந்த துப்பாக்கியை சோதனை நடத்தியபோது அதில் குண்டு இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில் பாட்டியின் கணக்கில் இருந்து ஏதோ ஒரு காரணத்திற்காக 400 டாலர் அபராதமாக வசூலிக்கப்பட்டது தெரியவந்தது.

அதை திரும்ப பெற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்துள்ளார். யாரையும் தவறாக சுட்டு விடக் கூடாது என்பதற்காக குண்டு இல்லாத துப்பாக்கியை எடுத்து வந்துள்ளார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: