இந்தியா வந்துள்ள இலங்கை அணி, இந்திய அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 250 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டானது.’ இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு முரளி விஜய், புஜாரா சதம் அடித்து கைகொடுத்தனர்.
அடுத்ததாக வந்த கோஹ்லி 259 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் தனது 5வது இரட்டை சதத்தை பதிவு செய்து, 213 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் ரோஹித் சர்மாவும் இலங்கையின் பந்துவீச்சை சிதறடித்து வருவதன் மூலம் போட்டியின் 172வது ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 590 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி, 385 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

0 comments: