இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட், ‘மழையால் ’டிரா’வில் முடிந்தது. இந்நிலையில் இரு அணிகள் மோதும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் துவங்குகிறது.
இதில் தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் நிச்சயமாக இடம் பெறுவார் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோலி கூறுகையில்,’ இந்திய அணிக்கு முதல் ஆல் ரவுண்டர் தேர்வாக ஹர்திக் பாண்டியா உள்ளார். அவருக்கு ஒரு துணை விஜய் சங்கர் இருப்பார் என எதிர்பார்க்கிறேன்.
அந்நிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் போது, ஒரு ஆல் ரவுண்டருக்கு மாற்று வீரர் அவசிய தேவை. அதனால் தான் அவரை இந்திய அணியில் தற்போது தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம். அவர் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தியுள்ளார். இந்த வாய்ப்பை அவர் நிச்சயமாக சிறப்பாக பயன்படுத்துவார் என நம்புகிறேன்.’ என்றார்.

0 comments: