நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் அபாயகரமான நிலைக்கு சென்றுள்ளது. டெல்லியை ஒட்டியுள்ள அரியானா, மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுகிறது.
இதன் காரணமாகவே தெளிவான வானிலையின்மை நிலவுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீபாவளிக்கு பின்னர் டெல்லியில் காற்று மாசுபாடு மிக மோசமாக சென்றுள்ளது. பெருகி வரும் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சுபுகையே இதற்கு காரணமாகும்.
வெளிப்புற காற்றின் தரத்தை நிர்ணயம் செய்யும் காற்று தர குறியீடு டெல்லி மற்றும் தலைநகர் பிராந்திய பகுதிகளில் காலை 9.30 மணியளவில் 446 ஆக பதிவாகியுள்ளது.
தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில் உள்ள 19 மையங்களில் 12 மையங்களில் காற்று சுகாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றதை காட்டி உள்ளது.
புகை பனி மூட்டத்தால் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் அதிகரித்துள்ளது. அது மட்டுமில்லாமல் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மோசமான வானிலை நிலவி வரும் காரணத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக டெல்லி அரசு ஆலோசனை செய்தது.
இதில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், டெல்லி மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் பெரும்பாலும் இந்த காற்று மாசுப்பாட்டால் பாதிக்கப்படுவார்கள். இதனால் சிலர் டெல்லி நகரத்தை விட்டு காலி செய்து வேறு ஒரு நகரத்திற்கு இடம் பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனை அரசு விரைவில் ஒரு நல்லத் தீர்வு காணவேண்டும் என்று பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கையாகும்.

0 comments: