Sunday, 26 November 2017

உடல் சூடு தணியவில்லையா.? அப்படினா இப்படி ட்ரை பண்ணுங்க பாஸ்!


உடல் சூடு என்பது என்பது பொதுவாக மனிதர்களிடையே காணப்படுவது வழக்கமாகும். ஆனால் அதுவே சிலருக்கு சமநிலை இல்லாமல் அதிகமாக உடல் சூடு ஏற்பட்டு அதனை சரிவர கவனிக்காமல் விட்டால் பின்னாடி பல்வேறு வகையான உடல் உபாதைக்கு ஆளாக நேரிடும்.
அது போன்று கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், வயிற்றில் கட்டிகள், வாய்ப்புண், நாக்குப் புண் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடும்.
இதற்கு சித்த மருத்துவத்தில் எளிய மருத்துவ முறைகள் இருக்கின்றன.
1. காலிஃபிளவரை தினமும் சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.
2. முந்திரிப் பழத்தை சாப்பிட்டு வந்தாலும் உடல் சூடு தணியும்.
3. நாட்டு வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தாலல் உடல்சூடு தணியும்.
4. முள்ளிக்கீரையை சிறிது துவரம் பருப்புடன் கடைந்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல்சூடு தணியும்.
5. மணத்தக்காளி கீரையை சிறுபருப்புடன் கடைந்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல்சூடு தணியும்.
6. பொன்னாங்கண்ணிக் கீரையை நீரில் கழுவி, மிளகு, பருப்பு சேர்த்து வேகவைத்து கடைந்து, சிறிது நெய் விட்டு சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.
7. வெள்ளரிக்காய் அல்லது வெள்ளரிப் பிஞ்சு பச்சையாக அப்படியே சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.
8. புளிச்சக் கீரையை சமைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டுவர உடல்சூடு தணியும்.
9. ஒரு கைப்பிடி அளவு மகிழம்பூவை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக அடுப்பில் கொதிக்க வைத்து பின்னர் ஆறியவுடன் வடிகட்டவும். காலை அரை டம்ளர், மாலை அரை டம்ளர் வீதம் 25 நாட்கள் குடித்துவர உடல் சூடு தணியும்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: