Monday, 27 November 2017


அறிவியல் ஆராய்ச்சிகள், தொழில், பருவநிலை கணிப்பு, ராணுவ நடவடிக்கைகள் போன்ற பலவற்றுக்காக, 'சூப்பர் கம்ப்யூட்டர்' எனப்படும் மீத்திறன் கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. 
இத்தகைய மீத்திறன் கணினிகளை தயாரித்து பயன்படுத்துவதில், வல்லரசு நாடுகளுக்குள் பெரும் போட்டியே நடக்கிறது. 

இந்தப் போட்டியில் முன்னணியில் இருந்த அமெரிக்காவை, கடந்த சில ஆண்டுகளாகவே சீனா பின்னுக்குத் தள்ளி வருகிறது.

மீத்திறன் கணினிகளின் தரவரிசை பட்டியலை வெளியிடும் இணையதளமான, 'டாப்500.ஆர்க்' அண்மையில் வெளியிட்டுள்ள பட்டியலின் படி, எண்ணிக்கையில் அதிகமான மீத்திறன் கணினிகளை சொந்தமாக வைத்திருக்கும் நாடுகளில், சீனா முதலிடம் வகிக்கிறது. 
\
உலகின் மிக வேகமான மீத்திறன் கணினியான, 'சன்வே டாய்ஹு லைட்' உட்பட, மொத்தம், 202 மீத்திறன் கணினிகளை சீனா பயன்படுத்தி வருகிறது. இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள அமெரிக்காவிடம், 143 மீத்திறன் கணினிகள் உள்ளன. மூன்றாம் இடத்திலிருக்கும் ஜப்பானிடம், 35 மீத்திறன் கணினிகள் உள்ளன.

கடந்த ஜூலையில், சீனா தன் சன்வே டாய்ஹு லைட் மீத்திறன் கணினி மூலம், பேரண்டத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரக் கூட்டங்கள் போன்றவை அடங்கிய மிக விரிவான டிஜிட்டல் வரைபடத்தை உருவாக்கி சாதனை புரிந்திருக்கிறது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: