பிரான்சில் உள்ள பிளாக்னே என்ற மலைக் கிராமப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசர் கால் தடங்கள் தான், உலகின் மிகப் பழையவை என வல்லுனர்கள் அறிவித்து உள்ளனர்.
சவுரோபாட் வகை டைனோசர்களின் கால் தடங்கள் அப்பகுதியில், அரை கி.மீ., துாரம் வரை பதிந்துள்ளன. மொத்தம், 110 தனித்தனி டைனோசர் பாதப் பதிவுகள் அங்கு இப்போதும் உள்ளன.
பிளாக்னே கிராமத்தில், 2009ல் கண்டுபிடிக்கப்பட்ட இத் தடங்களை ஆராய்ந்த வல்லுனர்கள்,
இந்த டைனோசர்கள், 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை என்று அறிவித்துள்ளனர். இவற்றின் உடல், 115 அடி நீளமும், 40 டன் வரை எடையும் உள்ளவையாக இருக்கலாம் என்று கணித்துள்ளனர்.

0 comments: