தர்மபுரி அடுத்த கம்பைநல்லூர் அருகே உள்ளது பெரிச்சாகவுண்டம்பட்டி இந்த ஊரில் வசிப்பவர் வஜ்ஜிரம், இவரது மகள் லெட்சுமி (14), கம்பைநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 23ம் தேதி காலை வழக்கம்போல பள்ளிக்கு செல்வதாக சென்ற மாணவி மாலை வீடு திரும்பவில்லை, இதனால் பதற்றம்மடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.
ஆனால் மாணவி எங்கு சென்றார் என்று எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை, இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 2மணியளவில் பெருச்சாகவுண்டம்பட்டி அருகே உள்ள முட்புதரில் பள்ளி சீருடையுடன் மாணவி பிணமாக கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.
தகவலையடுத்து அங்கு விரைந்து சென்ற உறவினர்கள் இறந்து கிடந்த மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தும் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் மாணவி வயிற்றில் 8 மாத பெண் குழந்தை இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் தீவிரமாக விசாரித்ததில், லட்சுமி வீட்டிற்கு கடத்தூர் மடதஅள்ளி அருகே உள்ள பினாட்சிப்பட்டியை சேர்ந்த குப்புசாமியின் மகன் பிரதாப் என்பவர் அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது.
அவரை கைது செய்து விசாரித்தபோது லட்சுமியை காதலித்து வந்ததும் அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து மாணவி கர்ப்பமடைந்துள்ளார். அப்போது மாணவி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பிரதாப்பிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் மாணவியை தீர்த்துக்கட்ட எண்ணிய பிரதாப் யாரும் இல்லாத பகுதிக்கு வரவழைத்து அங்கு உள்ள குட்டையில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இவர் அந்த மாணவி தங்கை முறை என்பது தெரியவந்துள்ளது. முறை தவறிய காதலால் அநியாயமாக ஒரு உயிர் பரிபோனது அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

0 comments: