இதனை தொடர்ந்து தேர்தலுக்கான பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அதிகாரி, காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
மேலும், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே ஜோதி, தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்காணியுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குநராக உள்ள வேலுச்சாமி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். உதவி அலுவலர்களாக வட்டாட்சியர்கள் முருகேசன், சுப்பிரமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

0 comments: