இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஜனநாயக முறையில் ஆர்.கே.நகர் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்.
இரட்டை இலை சின்னம் அதிமுகவினருக்கு மீண்டும் கிடைத்தது பற்றி எங்களுக்கு கவலையில்லை.
காங்கிரஸ் மட்டுமின்றி பிற கட்சிகளிடம் இருந்து ஆதரவு கேட்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 comments: