ஏனெனில் முதல்வர் பதவியை கொடுத்த சசிகலவுக்கே துரோகம் இழைத்துவிட்டதால் இவர் தான் முதலில் பழிவாங்கப்பட வேண்டும் என்கின்றனர் தினகரன் தரப்பினர்.
ஆனால் ஒபிஎஸ் உடனான இணைப்பு மற்றும் இரட்டை இலை மீட்பு என எடப்பாடியின் பலம் கூடிகொண்டே போவதால் தினகரன் தரப்பை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் ஒபிஎஸ் மற்றும் எடப்படி இடையே மோதல் வெடித்திருப்பது தினகரன் அணியை உற்சாகப்படுத்தியுள்ளது.
21 எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக உள்ள நிலையில் மேலும் 20 எம்.எல்.ஏக்கள் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் தினகரன் தரப்பு ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில்தான் ஒபிஎஸ் மற்றும் எடப்பாடிக்கு இடையே பிளவு ஏற்படுத்தும் வகையில் மோதல் வெடித்து வருகிறது.
இது அனைத்தும் தினகரன் தரப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறது அதிமுக வட்டாரம்.

0 comments: