Sunday, 26 November 2017

ஆர்.கே.நகர் தேர்தல்.. டோக்கனுக்கு பொருட்கள் கொடுத்தால் கடை உரிமையாளர் கைது.! தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை!


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக 9 பேர் கொண்ட குழுவை தலைமை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இவர்கள் டிசம்பர் 4ம் தேதி சென்னைக்கு வருகை தர உள்ளனர்.

ஆர்.கே.நகரில் தேர்தல் விதிகள் ஏற்கெனவே நடைமுறைக்க வந்து விட்டது. இதற்கு முன்னர் நடந்த தவறுகள் மறுபடியும் நடைபெறாமல் இருப்பதற்காக பல்வேறு வகையான நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் விதிப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருகின்றது.

கடந்த முறை நடைபெற்ற தேர்தலின்போது கோடிக்கணக்கில் பணப்பட்டுவாடா நடைபெற்றதால் தேர்தல் நிறுத்தப்பட்டது. மறுபடியும் அதே தவறுகளை பின்பற்றாதவாறு தேர்தல் ஆணையம் தெருவுக்கு தெரு துணை ராணுவப்படையை வைத்து தீவிரமாக கண்காணிக்கும்.

அதே போன்று சென்னை மாவட்டத்தில் எந்த கடையிலும் டோக்கன் மூலம் பொருட்கள் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி மீறி பொருட்கள் கொடுக்கும் கடையின் உரிமையாளர் அதிரடியாக கைது செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: