Monday, 11 December 2017

2.0 ரிலீஸ் தள்ளி போக காரணம் என்ன தெரியுமா? ராஜமவுலி பாணியை கையில் எடுத்த ஷங்கர்...!!


இந்த படம் ஜனவரியில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாததால் ரிலீஸ் தேதி ஜனவரியில் இருந்து ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி போயுள்ளது. எனவே ட்ரைலர் வெளியீட்டு தேதியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது வந்துள்ள தகவலின் படி 2.0 டீஸர் ஜனவரி மாத இறுதியில் அல்லது பிப்ரவரி துவக்கத்தில் வெளியிடப்பட உள்ளது. ஹைதராபாத்தில் நடக்கவுள்ள விழாவில் வெளியிடப்படும். ட்ரைலர் மார்ச் மாதம் சென்னையில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

ரிலீஸ் தேதியை விரைவில் லைகா நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜமவுலியின் பாகுபலி ஏப்ரல் மாதம் வெளியாகி வசூலை வாரி குவித்தது. அதே பாணியில் ஷங்கரும் படத்தை ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: