Monday, 11 December 2017

வயது இருந்தபோது வாய்ப்பு இல்லை..! வாய்ப்பு வந்தபோது வயது இல்லை..! 50 வருடமாக பசியிலேயே வாழ்ந்து மடிந்த நடிகர்...!!


இப்போதெல்லாம் ஒரு நடிகர் ஒரு படத்தில் நடித்து விட்டாலே போதும் அவரது வாழ்க்கை முறையே மாறி விடுகிறது. ஆனால் ஒரு பழம் பெரும் நடிகர் 50 வருடமாக நடித்தும் புகழை பெற்றும் பசி, பட்டினியாகவே வாழ்ந்து மடிந்துள்ளார்.

அவர் என்னத்த கண்ணையா, இவர் எம்.ஜி.ஆர் காலத்தில் நடிக்க வந்தார். அப்போது முதலே படத்தில் ஒன்றிரண்டு காட்சிகளில் நடிக்கும் நடிகராகவே இருந்தார். யாரும் பெரிய வாய்ப்புகளை வழங்கவில்லை. இதனால் அவர் 50 வருடத்திற்கும் மேலாக கோடம்பாக்கம் ரோடுகளில் பசி, பட்டினியுமாகவே நடமாடி வந்துள்ளார்.

இறுதி காலத்தை நெருங்கியபோது, அவருக்கு வடிவேலு மூலம் விடிவு காலம் வந்தது. வடிவேலுவுடன் வரும் ஆனா வராது என்ற டயலாக் பேசி நடித்தார். இந்த டயலாக் பட்டி தொட்டி எங்கும் பரவியது.

அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. அவர் எதிர்பார்த்த செல்வம், பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அதனை அனுபவிக்க அவருக்கு வயது இல்லை. ஒரு இரவில் ஹார்ட் அட்டாக் வந்து உயிர் பிரிந்தது. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: