Tuesday, 12 December 2017

உடுமலை சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை..! கோர்ட் அதிரடி...!!


திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யா.  உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர். சங்கரும் -கவுசல்யாவும்  காதலித்து வந்தனர். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டில்  இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த எதிர்ப்பை மீறி இருவரும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையினர் மூலம் இருவரையும் கொல்ல திட்டமிட்டனர்.

கடந்த ஆண்டு மார்ச் 13-ந் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கவுசல்யாவின் பெற்றோர் ஏவிவிட்ட கொலைகார கும்பல் சங்கர்- கவுசல்யாவை பட்டப்பகலில் வெட்டி சாய்த்தது. இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிருக்குப் போராடி உயிரிழந்தார்.

 பலத்த வெட்டு காயங்களுடன் கவுசல்யா உயிர் பிழைத்தார். தமிழகத்தையே  இந்த சம்பவம் உலுக்கியது .
இந்த வழக்கு  திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.   இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 11 பேர் குற்றவாளி  என கோர்ட்   தீர்ப்பு வழங்கியது. 

இதனை தொடர்ந்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு அளித்தார். 3 பேரை விடுதலை செய்தது. இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: