ஆர்.கே நகர் தேர்தலில் தினகரன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதனால் அதிமுக தலைமை மீது அக்கட்சியினருக்கே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினர் அதிமுகவை விமர்சித்து வருகின்றனர்.
அதுபோல துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சர்ச்சை பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தினகரன் வெற்றி பெற்றதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர்தான் காரணம். முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் ஆண்மையற்றவர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பினர் குருமூர்த்திக்கு கண்டனங்களை தெரிவித்து உள்ளனர். அதேபோல அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது,
குருமூர்த்தி தான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் பலனை எதிர்கொள்வார். இது குறித்து வழக்கு தொடர பரிசீலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0 comments: