Tuesday, 26 December 2017

தமிழகத்தில் இன்னும் 3 மாதத்தில் ஆளுநர் ஆட்சி..! எடப்பாடி ஆட்சியை கவிழ்க்கும் பணிகள் ஆரம்பம்...!!


நடந்து முடிந்த ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் தினகரன் அமோக வெற்றி பெற்றார். இவர் வெற்றி பெற்றால் தமிழகத்தில் நிச்சயம் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்பட்டது. முக்கியமாக எடப்பாடி அரசு கவிழ்ந்து ஆட்சி மாற்றம் ஏற்படும்,

இல்லை என்றால் 3 மாதத்தில் கவர்னர் ஆட்சி அமலாகும் என்ற தகவல்கள் பரவியது. அதன்படியே சில செயல்பாடுகளும் உள்ளது. எடப்பாடி அணியில் இருந்து ஒரு எம்.பி மற்றும் எம்.எல்.ஏ தினகரன் பக்கம் சாய்ந்துள்ளனர். இன்னும் பலர் தினகரனிடம் பேசி வருகிறார்கள். அவர்கள் எந்த நேரத்திலும் தினகரன் பக்கம் தாவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சி மாற்றம் இல்லை என்றால் கவர்னர் ஆட்சியாவது அமல்படுத்ப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி ஆளுநர் ஆட்சி அமலானால் தமிழ் நாட்டில் சாகர் மாலா, நவோதயா பள்ளிகள், மீத்தேன் திட்டம் மற்றும் ரேசன் கடைக்கு மூடு விழா நடத்துவார்கள்.

அதே போல தாராளமய  பொருளாதார மண்டலங்கள் திறக்கப்படும். டெல்டா பகுதியில் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அனுமதி, நீட்டி டிட் போன்ற உலகமய தேர்ச்சி தேர்வு திணிப்புகள் போன்ற 7 பெரும் கேடான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

தமிழகத்தை இதுபோன்ற அபாயங்களில் இருந்து காப்பாற்றப்போவது யார் என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: