Sunday, 10 December 2017

தற்கொலையை நேரலை செய்த காதலி...! காதலன் செய்த காரியம் என்ன தெரியுமா?


எப்போது பாசத்தை விட காதலுக்கு வலிமை அதிகம் என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் திட்டினால் மகனோ அல்லது மகளோ ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட்டு விடுகிறார்கள். ஆனால் அதே காதலனோ அல்லது காதலியோ திட்டினால், வெறுத்தால் அதன் விளைவு பெரிய அளவில் உள்ளது.

அதுபோன்ற சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. காதலன் தன்னிடம் சில நாட்களாக சரியாக பேசவில்லை என கூறி பேஸ்புக் நேரலையில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காதலன் அவள் தங்கியிருந்த விடுதிக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து விடுதியினர் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றி உள்ளனர்.

இவர் தனது காதலன் கல்லூரியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக பேசவில்லை. தொடர்ந்து போன் செய்தபோது என்னை தொந்தரவு செய்யாதே செத்து தொலை என கூறி உள்ளார்.

இதனால் மனமுடைந்த காதலி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனை நேரலையிலும் ஒளிபரப்பு செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: