இளைஞர்கள் தற்போது தங்கள் திறமையெல்லாம் யு-டியூபிலேயே நிரூபித்துவிடுகின்றனர். அதன் மூலம் வெள்ளித்திரை வாய்ப்பு அவர்கள் வீட்டு கதவை தட்டுகின்றது.
அந்த வகையில் பல யு-டியூப் பிரபலங்கள் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைக்க, தற்போது எருமசாணி புகழ் விஜய்யும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
ஏற்கனவே ஹரிஜாவிற்கு பல பட வாய்ப்புக்கள் தேடிவர தற்போது எருமசாணி விஜய்க்கு அதர்வா நடிக்கும் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இப்படத்தை டார்லிங் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கவுள்ளார், எருமசாணி டீம் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படத்தை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments: