Friday, 1 December 2017

கடும் கோபத்தில் கலா மாஸ்டர்..! தேம்பி தேம்பி அழுத ஜூலி...!


பிக்பாஸ் நிகழ்ச்சியால் மக்களின் கடும் வெறுப்பை சம்பாதித்தவர் ஜூலி. இவர் இந்த வெறுப்பை தற்போது மூலதனமாக வைத்து பல வாய்ப்புகளை பெற்று வருகிறார். விஜய் டிவியில் தொகுப்பாளராக முயற்சி செய்தார். ஆனால் விஜய் டிவி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் கலைஞர் டிவியில் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் தனக்குரிய சேட்டைகளை செய்து மக்களிடம் அதிருப்தியை பெற்று வருகிறார். இதனை வைத்தே கலைஞர் டிவியும் விஜய் டிவி பாணியில் டிஆர்பியை ஏற்று வருகிறது.

அதாவது வாரம் ஒரு முறையாவது ஜூலியை அழ வைத்து அதன் மூலம் ஆதாயம் தேடுகிறது. அதுபோல சமீபத்தில் ஒரு புரோமோவை வெளியிட்டது. அதில் கலா மாஸ்டர் கடும் கோபத்தில் கண்டபடி பேசுகிறார். ஜூலி தேம்பி தேம்பி அழுகிறார்.

அது என்னவென்றால் ஜூலியை எல்லோரும் ஏன் கெட்டவளாகவே பார்க்கின்றீர்கள். ஒருவர் கெட்டவராக இருந்தால், அவர் கெட்டவராகவே வாழ்நாள் முழுவதும் இருப்பாரா என்ன?. எனவே ஒருவரை திட்டும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என கூறுகிறார்.

இதனை கேட்ட ஜூலியும் தேம்பி தேம்பி அழுகிறார். எப்படியோ ஜூலியை அழ வைத்து மற்றவர்கள் அதில் ஆதாயம் பார்க்கிறார்கள் என்பது உண்மையாகவே உள்ளது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: