Friday, 1 December 2017

டிசம்பர் 4ம் தேதி முதல் சென்னைக்கு அழிவு ஆரம்பம்..! வானிலை மையம் எச்சரிக்கை...!!


தென்கிழக்கு அரபி கடலில் உருவான உக்கி புயல் தூத்துகுடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தையே புரட்டி போட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை. இவர்களை மீட்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது. வரலாறு காணாத மழை காரணமாக தூத்துகுடி மாவட்டமே வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் வலுவான காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வட தமிழகம் அல்லது தெற்கு ஆந்திராவை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.

அப்போது மேலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது டிசம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதிக்குள் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

எனவே சென்னையில் 4 மற்றும் 5ம் தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிமை மையம் கணித்துள்ளது. இதனால் சென்னை மற்றும் கடலூர் மாவட்ட மக்கள்  உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: