சமீபத்தில் தெலுங்கில் வெளியான “ஷனம்” என்ற திரைப்படம் தமிழில் சிபிராஜ் நடிப்பில் “சத்யா” என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. இந்த படத்தில் சிபிராஜ் மட்டுமில்லாமல் ரம்யா நம்பீசன், வரலட்சுமி, சதீஷ், யோகிபாபு உள்பட பல பிரபல நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள். விஜய் ஆண்டனியின் “சைத்தான்” படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தான் இந்த படத்தின் இயக்குனர்.
இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் பிரதீப் ரம்யா நம்பீசனுக்கும், வரலட்சுமிக்கும் எப்படி நடிக்க வேண்டும் என தத்ரூபமாக நடிப்பு சொல்லி கொடுத்திருக்கிறார். இயக்குனர் சொல்படி கேட்டு நடித்தார் ரம்யா நம்பீசன்.
ஆனால், வரலட்சுமியோ இயக்குரை பார்த்து “போயா..” என்று கிண்டலாக கூறியுள்ளார். இதனை சத்யா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சிபிராஜே கூறியுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில் “ சத்யா “ படத்தின் தலைப்பை கமல் சாரிடம் முறைப்படி வாங்கி இந்த படத்துக்கு வைத்துள்ளோம். கதையில் கதாநாயகனின் பெயர் சத்யா என்பதால் அதையே படத்தின் தலைப்பாக வைத்துவிட முடிவு செய்தோம் என்ற கூறினார் நடிகர் சிபிராஜ். பாடல் வெளியீட்டு விழாவுக்கு நடிகை வரலட்சுமி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: