பிக்பாஸ் ஜூலி என்றாலே பெரும்பாலானவர்களுக்கு ஒரு இனம் புரியாத சிரிப்பு கலந்த கடுப்பு கிளம்பி ஆட்டிவைக்கும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தன்னுடைய கேளிக்கையான போராட்ட வசனங்கள் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இவர். பலரும் இவரை வீரத்தமிழச்சி என்று கூட அழைத்தனர்.
திடீரெனே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஜூலி. அதோடு காலியானது அம்மணியின் களோபரம். பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய மோசமான அணுகுமுறை, குசலம் பேசுதல், திரித்து கூறுதல் என அனைத்தையும் எப்படி செய்யவேண்டும் என ட்யூசன் எடுத்துக்கொண்டிருந்தார் ஜூலி. இதனால், பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜூலியை வெளியேற்றினார்கள் மக்கள்.
தற்போது, பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக உள்ளார் ஜூலி. இந்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்த டீ.சி.எஸ் நிறுவன ஊழியர் ஒருவர்.
தான் பயங்கரமான ஜூலி ரசிகன் என்றும், அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளவே நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என்றும் கூறி பார்ப்பவர்களை பகீர் கிளப்பினார். பிறகு, நான் ஜூலியுடன் செல்ஃபி எடுத்துவிட்டுத்தான் செல்வேன் என்று நிகழ்ச்சி மேடையிலேயே ஜூலயுடன் ஒரு புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார் மனிதர்.

0 comments: