கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி வந்த போது பாம்புகள் கரை ஒதுங்கியதை போல மீண்டும் ஆயிரக்கணக்கான பாம்புகள் கரை ஒதுங்கி உள்ளதால் இலங்கை மக்கள் பதற்றதுடன் காணப்படுகின்றனர்.
இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியான மட்டக்களப்பு மாவட்டம் நாவலடியில் நேற்று காலை வலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாக கூறுகின்றனர். மேலும் அந்த பகுதியில் கடல் அலையுடன் பாம்புகளும் சேர்த்து கரை ஒதுங்குகின்றன.
அண்மைக் காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளான நிலையில் இன்று இவ்வாறு வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதாக கூறுகின்றனர்.
காலநிலை மாற்றங்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளதாக மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
இதுபோன்று கடந்த சுனாமி பேரலை ஏற்பட்ட காலத்திலும் பெருமளவான பாம்புகள் மட்டக்களப்பு பகுதியில் படையெடுத்ததால் இவ்வாறு மக்கள் மத்தியில் இன்றும் அச்சநிலையேற்பட்டுள்ளது.
அதிகளவிலான பாம்புகள் ஏன் பிடிபடுகின்றன என்பது தொடார்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments: