இந்த காலத்தில் நடுரோட்டில் எதாவது வாகனம் பழுதாகி நின்றால் வேடிக்கை பார்ப்பார்கள். இல்லை என்றால் செல்பி எடுத்து பேஸ்புக்கில் போடுவார்கள். யாரும் உதவ முன் வரமாட்டார்கள். ஆனால் ஒரு போலீஸ் எஸ்.பி பஞ்சராகி நின்ற சுற்றுலா காரின் டயரை தானே ஸ்பேனர் பிடித்து கழற்ற முயன்றார்.
இவர் சிக்கமகளூரு எஸ்.பி அண்ணாமலை. தமிழரான இவர் கர்நாடகத்தில் வெகு பிரசித்தி பெற்ற பொதுகமக்களுக்கு பிடித்தமான போலீஸ் அதிகாரியாவார். இவர் நேற்று கொப்பாவில் இருந்து சிக்கமகளூருவை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது மத்தாவரா என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் வந்த கார் பஞ்சராகி நின்றது. நடுக்காடு என்பதால் சுற்றுலா பயணிகள் நடுங்கியபடி இருந்தனர். அந்த நேரத்தில் ஆபத்பாந்தவன் போல எஸ்பி அண்ணாமலை அந்த வழியாக வந்தார்.
விபரம் கேட்டு, தானே ஸ்பேனர் பிடித்து டயரை கழற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. எனவே மெக்கானிக் ஒருவருக்கு போன் செய்து வரவழைத்தார். மேலும் சுற்றுலா பயணிகளை ஜீப்பில் ஏற்றி கொண்டு வந்து சிக்கமகளூரு நகரில் விட்டார்.
இந்த சம்பவத்தால் சுற்றுலா பயணிகள் எஸ்பியின் செயலை பார்த்து நெகிழ்ந்து போனார்கள். எஸ்.பி அண்ணாமலையின் அதிரடி நடவடிக்கையால் சிக்கமகளூரு மாவட்டத்தில் ரவடியிசம் அடியோடு ஒழிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: