Monday, 25 December 2017

நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லவில்லை..! ரஜினிகாந்த் பேச்சால் ரசிகர்கள் அதிருப்தி...!!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 7 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் ரசிகர்களை சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பு வரும் 31ம் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.

முதல் நாளில் இன்று ரஜினிகாந்த் ரசிகர்களிடம் பேசினார், அப்போது அவர் கூறும்போது, நான் பிறந்த நாள் அன்றே ரசிகர்களை சந்திக்கலாம்  என்று நினைத்தேன். ஆனால் அன்று தனிமையில் இருக்க விரும்பினேன்.

அதனால் யாரையும் சந்திக்கவில்லை. அரசியலுக்கு நான் புதியவன் அல்ல. யுத்தத்திற்கு சென்றால் வெற்றி பெற வேண்டும். வெற்ற பெற வியூகங்கள் தேவை. போர் வரட்டும் பார்க்கலாம் என்று கூறினேன். பேர் என்றால் தேர்தல்தானா.

சமூக வலைதளங்களில் வரும் எதிர்மறை கருத்துகளை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். எனது அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ம் தேதி அறிவிப்பேன். நிச்சயமாக வருவேன் என்று சொல்லவில்லை.

அரசியலின் கஷ்ட நஷ்டங்கள் தெரிந்ததால்தான் நான் தயங்குகிறேன்.  நான் அரசியலுக்கு வருவதில் மக்களை விட ஊடகங்கள்தான் ஆர்வமாக உள்ளன என்றார்.


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: