தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவானாக திகழ்ந்தவர் நாகேஷ். இவரது மகன் ஆனந்த் பாபு. இவர் பிரபல காமெடி நடிகரின் மகன் என்பதால் எளிதில் சினிமாவுக்குள் நுழைய முடிந்தது. கடந்த 1986ம் ஆண்டு தங்கைக்கோர் கீதம் படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து வானம்பாடி, புதுவசந்தம், சேரன் பாண்டியன் படங்கள் நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அவரது வளர்ச்சி எந்த அளவுக்கு இருந்ததோ அதே அளவுக்கு அவருக்கு குடிப்பழக்கமும் அதிகமானது. இந்த குடிப்பழக்கம் அவரது வாழ்க்கையையே கெடுத்தது.
இதன் காரணமாக இவரது மனைவி கடந்த 2013ல் விவாகரத்து செய்தார். அவரது குழந்தைகளும் கவனித்து கொள்வதில்லை. ஒரு கட்டத்தில் உயிர் போகும் நிலையில் இருந்த இவரை அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர்.
தற்போது சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதோடு சீரியல்களிலும் நடித்து வருகிறார். எப்படி இருந்தவர், எல்லா திறமைகளும் இருந்தும் குடிப்பழக்கத்தால் நிர்கதியாய் நிற்கிறார்.

0 comments: