Sunday, 10 December 2017

சென்னை வெள்ளத்தில் மலர்ந்த பிரபல நடிகரின் காதல்..! பெற்றோர் எதிர்ப்பை மீறி கரம் பிடித்தார்...!!


சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு வர்தா புயலால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் பல்வேறு தரப்பினர் மனிதாபிமான அடிப்படையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து வந்தனர்.

அதே போல கண்ணதாசனின் பேரன் ஆதவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வந்தார். அதே போல வினோதினி என்ற பெண்ணும் உதவி வந்தார். அப்போது ஆதவுக்கும், வினோதினிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதலுக்கு முதலில் இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் இருவரும் தங்களது காதலில் உறுதியாக இருந்தததால் அதன்பிறகு பெற்றோர் பச்சை கொடி காட்டினர்.

அதன்படி இவர்களது காதல் திருமணம் நடந்த 6ம் தேதி சென்னையில் கோலாகலமாக நடந்தது. பொன்மாலை பொழுது படத்தில் நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: