Sunday, 10 December 2017

தெருவோர டீக்கடைக்காரருக்கு அஜித் செய்த உதவி..! நெகிழ்ச்சியில் வாயடைத்து போன வாலிபர்...!!


தல எனப்படும் அஜித் விளம்பரமே இல்லாமல் பல உதவிகளை செய்து வருகிறார் என்பது உலகமே அறிந்த விஷயம். அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சமீபத்தில் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திராவுக்கு போன் செய்துள்ளார். போனை வேறொருவர் எடுத்துள்ளார். அவர் சுரேசின் மாமனார் இறந்து விட்டதாக கூறினார்.

அவரிடம் விலாசத்தை கேட்டு கொண்டு அந்த இரவு நேரத்திலும் சுரேசின் மாமனார் வசித்து வந்த சென்னை புறநகர் பகுதிக்கு சென்றார். வழியில் கேனில் டீ விற்று கொண்டிருந்த வாலிபரிடம் விலாசம் கேட்டார். அவரும் அஜித்தை பார்த்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் ஒரு வழியாக விலாசம் சொன்னார்.

துக்க வீட்டுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் வேறொருவரை மற்றொரு காரில் பின் தொடர செய்தார். வழியில் அந்த டீ விற்கும் இளைஞரிடம் பெரிய தொகை ஒன்றை கொடுத்தார்.

மேலும் அந்த இளைஞரிடம் துக்க வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் டீ கொடுக்க செய்து, பின்னர் காரில் அதே இடத்தில் கொண்டு வந்து விட்டு  விடுங்கள் என்று கூறினார். 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: