Saturday, 30 December 2017

ஒரு வேளை சாப்பாட்டுக்காக வாடகை கார் ஓட்டும் பிரபல நடிகரின் மகன்..!!


இன்றைய நடிகர்கள் எல்லாம் ஒரு படம் வெளிவந்தால் போதும், அடுத்த படத்தில் கோடிக்கணக்கில் சம்பளத்தை ஏற்றி விடுகிறார்கள். முடிந்த வரை தங்களது வாரிசுகளுக்கு சொத்துகளையும் சேர்த்து விடுகிறார்கள்.

ஆனால் 70 மற்றும் 80களில் நடித்த நடிகர்கள் அப்படி இல்லை. அவர்களுக்கு கிடைத்த சம்பளமும் குறைவு, வாய்ப்புகளும் குறைவாக இருந்தது. அதனால் அவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் வறுமையிலேயே இருந்துள்ளது. அவர்களது வாரிசுகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகவே இருந்துள்ளது.

அதே கன்னடத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்து இருப்பவர் அஸ்வத். இவரது மகன் சங்கர் அஸ்வத். இவரும் தந்தையை போல சினிமாவில் நடித்து வருகிறார். அதே போல சின்னத்திரையிலும் நடித்து வந்தார்.

ஆனால் தற்போது சரியான வாய்ப்புகள் வரவில்லை. இதனால் வறுமையில் வாடி வருகிறார். வறுமை காரணமாக சாப்பாட்டுக்கு வழியின்றி வாடகை கார் ஓட்டி வருகிறார்.

இது குறித்து அவர் கூறும்போது, கடந்த ஏப்ரல் மாதம் முதல் எந்த வாய்ப்புகளும் வரவில்லை. இதனால் வீட்டில் இருப்பதை விட ஏதாவது வேலை செய்யலாமே என தோன்றியது.

அதனால் வாடகை கார் ஓட்டி வருகிறேன். மேலும் அவ்வப்போது சினிமாவில் சிறு சிறு வேடங்கள் வருகிறது. அதனையும் நடித்து கொடுத்து வருகிறேன் என்றார். 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: