Saturday, 30 December 2017

ஒரே படத்தில் ஆடி சொகுசு கார் வாங்கிய புதுமுக நடிகை..! சக நடிகைகள் காதில் புகை...!!


புதுமுக நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதில் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் சம்பளம் பெரிதாக இருக்காது. சில நடிகைகள் சம்பளம் வாங்காமலேயே நடித்ததும் உண்டு.  ஒரு சில நடிகைகளுக்குதான் பெரிய அளவில் சம்பளம் கிடைக்கும்.

இந்த நிலையில் ஒரு புதுமுக நடிகை நடித்தது ஒரே ஒரு படம். அதுவும் நேற்றுதான் ரிலீசானது. அதற்குள் சொகுசு ஆடி கார் வாங்கி உள்ளார். அவரது பெயர் ரஷ்மிகா. பெங்களூரை சேர்ந்த இவர் கன்னடத்தில் கணேசுடன் சமக் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் நேற்றுதான் வெளியானது. படத்திற்கு ரசிகர்களும் அமோக வரவேற்பை அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து ரஷ்மிகாவும் அதே குஷியில் சொகுசு கார் வாங்கி அதனை தனது வருங்கால கணவரும், நடிகருமான ரக்ஷித் ஷெட்டியுடன் ஜாலி ட்ரைவ் சென்றுள்ளார்.

இந்த படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: